பள்ளி மாணவியை கடித்த லேபர்டாக் நாய் - தட்டிகேட்ட தாயாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
மதுரை மாநகர் நியூஜெயில் ரோடு மில்காலனி பகுதியை சேர்ந்த நேசலெட்சுமி என்பவரின் 12 வயது மகளான பள்ளி மாணவி சக்தி தெருவில் நடந்துசென்றபோது லேபர் டாக் இன நாய் காலில் கடித்து படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து நாய் கடித்தது குறித்து கேட்க சென்ற மாணவியின் தாயாரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நாயின் உரிமையாளர் விஜய்சாரதி மற்றும் அவரது உறவினர் சத்யா ஆகிய இருவர் மீது கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .




