உங்களின் தோல்வியான பெயிலியர் மாடல் அரசை திசைத்திருப்ப எதிர்க்கட்சிகளில் போர்வாள்களை இது போன்ற அரசியல் அதிகாரங்களை வைத்து மழங்கச் செய்ய உள்ளீர்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
திமுக ஆட்சியின் சாதனை சிலரை தூங்க விடாமல் செய்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, குப்பை வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருள் விலை உயர்வு, குப்பை வரி உயர்வு ,ஆம்னி பஸ் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பாட புத்தகம் விலை உயர்வு , டாஸ்மாக் விலை உயர்வு என விலைவாசி உயர்வால் சாதனை படைத்து பொதுமக்களின் தூக்கத்தை நீங்கள் தொலைத்து உள்ளீர்கள்.
சட்டம் -ஒழுங்கு சீர்கேட்டினால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் , பள்ளிக்கு செல்லும் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, தொடர்ந்து தொடர்ந்து கட்ட பஞ்சாயத்து என அப்பாவி மக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்து வருகிறார்கள்.
ஆண்டுக்கு ஆண்டு கடன் சுமை உயந்து கொண்டு வருகிறது, அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தீர்கள்? அதில் மாணவர் வாங்கிய கல்வி கடன் ரத்து ,பெட்ரோல் டீசல் விலை குறைப்போம், 100 ரூபாய் கேஸ் மானியம் வழங்குவோம், நீட் தேர்வை ரத்து செய்வோம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம், கூலியை உயர்த்துவோம், தானிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவோம், கச்சத் தீவை மீட்டு தமிழக மீனவர்கள் உரிமையை காப்போம், நெசவாளர்களுக்கு குறைந்த விலையில் நூல் வழங்குவோம் , மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்போம், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் சேர்ப்போம், தமிழகத்தில் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம், தனியார் வேலைவாய்ப்பில் 75% தமிழருக்கு வேலை வழங்க சட்டம் இயற்றுவோம் இப்படி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி இன்றைக்கு தமிழக மக்களின் தூக்கத்தை தொலைத்துள்ளது ஸ்டாலின் அரசு.
இந்தியாவிலே முறைகேடு நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் முதன்மை மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது.
கனிமவள கொள்ளை, கட்டுமானத்தில் முறைகேடு, மதுபானத்தில் முறைகேடு என திராவிட மாடல் ஆட்சியால் மக்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதிகளில் பெரும் குளறுபடியால் அறுவடை செய்த நெல்களெல்லாம் மழையில் சேதமாய் வீணாகி போயின. இதனால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.
தன்னை எதிர்த்து கட்சியை தொடங்கிய கமல்ஹாசனிடம் தன் அன்பால், தன் அதிகாரத்தால் அவரின் போர்வாளை மழுங்க செய்துவிட்டார்.
எதிர்க்கட்சிகள் போர்வாளை மழுங்க செய்கிற காட்டும் அக்கரையில் இன்றைக்கு ஒட்டுமொத்த குடும்பமும் கமலஹாசன் பிறந்தநாள் விழாவில் அவரது வீட்டுக்கு, வீட்டோடு சென்று விருந்து சாப்பிட்டு வந்தீர்கள். ஆனால் திமுகவிற்கு காலம், காலமாக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகள் இல்லத்திற்கு ஏன் வரவில்லை.
திறமை இருந்தால் ஸ்டாலின் பதவி தருவார் என்று ஏ வ வேலு புகழ் பாடுகிறார், ஆனால் இன்றைக்கு இந்த அதிகாரத்திற்கும், அடக்குமுறைகளுக்கும் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க தயாராகி விட்டார்கள்.
2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தின் அம்மா ஆட்சியை மலர செய்ய மக்கள் தயாராகிவிட்டனர். நீங்கள் எத்தனை போர்வாள்களை மழுங்க செய்தாலும் அதிமுக நிச்சயம் மலரும் என கூறினார்.




