மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதால் நூறு பேரைக் காணவில்லை..அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ரோஹிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு மலேசியவின் லங்காவி தீவு அருகே கடலில் மூழ்கியது. இதில் நூறு பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் என 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க ரோஹிங்கியாக்கள். தரகர்களிடம் பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து படகுகள் மூலம் வங்காளதேசத்திற்கு தப்பிச் செல்கின்றனர். இதற்காக அவர்கள் மிக அபாயகரமான பயணத்தை சென்று வருகின்றனர். அப்படி சென்ற ஒரு படகு கவிழ்ந்து தற்போது ஏராளமானோர் மூழ்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்திற்குள்ளான படகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து பல படகுகளில் புறப்பட்ட சுமார் 300 ரோஹிங்கியாக்களின் ஒரு பெரிய குழுவில் இதுவும் ஒன்று . கடலில் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ன. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மலேசியா கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.




