சபரிமலையில் மலையேறும் போது பெண் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நவ.16-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
அன்றாடம் பக்தர்களின் வருகை அதிகமிருப்பதால் தினமும் 90,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் 70,000 பேர், நேரடி முன் பதிவு செய்தோர் 20,000 பேர் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சபரிமலைக்கு யாத்திரை சென்ற பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த சதி(58) என்ற பெண் அப்பாச்சிமேடு பகுதியில் மலை ஏறும் போது மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




