நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம்(அக்டோபர்) 9-ம் தேதி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை நவம்பர் 3-ம் தேதி நாகை மீனவர்கள் 31 பேர், ராமநாதபுரம் மீனவர்கள் 4 மீனவர்கள் என 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
இந்த நிலையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டியதாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தை சேர்ந்த 114 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




