அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நவம்பர் 27-ம் தேதி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் மூத்த அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதிமுவில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், டிடிவி செங்கோட்டையன் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார்.
இதனால் அவரிடமிருந்த கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில், தேவர் ஜெயந்தியன்று ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் பேட்டியளித்தார். இதனால் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் நவம்பர் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் விஜய்யை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் பரவும் இந்த தகவல்களை செங்கோட்டையன் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




