Hot News :

பிரான்ஸ் முன்னாள் அதிபர் தனிச் சிறையில் அடைப்பு

© News Today Tamil

நிதி மோசடி குற்றச்சாட்டில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அதிபராக செயல்பட்டவர் நிகோலஸ் சர்கோஸி ( 70). இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்குமுன் தீர்ப்பு வெளியானது. அதில், நிகோலஸ் சார்கோஸி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த  நிலையில், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிகோலஸ் சர்கோஸி பாரிஸில் உள்ள லா சாண்டி சிறையில் இன்று அடைக்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகோலஸ் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நிகோலஸ் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post பாண்டியர் கால அரசு முத்திரை வெளியிடபட்டது
Next Post கேரளாவில் இருந்து கோவைக்கு பன்றிகள் கொண்டு வர தடை
Related Posts