பிரேசில் நடைபெற்று வரும் ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலின் பெலெம் நகரில் ஐ.நா.வின் 30வது காலநிலை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், நாட்டின் தலைவர்கள் என உட்பட ஆயிரக்கணக்கானோர் மாநாட்டில் பங்கேற்றுள்னர்.
இந்த நிலையில் மாநாடு நடைபெற்று கொண்டிருந்த அரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு புகை சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த பிரதிநிதிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
புகையால் 13 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 30 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான காரணம் கண்டறியப்படும் என்று பிரேசில் அரசு அறிவித்துள்ளது.




