மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30-ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. இதனால், கோயில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது.
அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை. மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, இந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தது. தற்போது நீதிமன்ற உத்தரவின் படி நவம்பர் 30-ம் தேதி மாலை 3 மணிக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வருமாறு, இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.




