ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.
ஹாங்காங் நாட்டின் தாய்போ நகரில் வாங் பெக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 35 மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதிகளுக்கும் பரவியது.
இந்த தகவலறிந்த தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ விபத்தில் 279 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அவர்களைத் தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 900 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.




