Hot News :

சவுதியில் பயங்கர விபத்து... 42 இந்தியர்கள் பலி

© News Today Tamil

சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின்  இஸ்லாமிய புனித நகரமாக மதீனா திகழ்கிறது. மெக்காவுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்வார்கள். அப்படி மதீனாவுக்கு அருகே உம்ரா புனித பயணம் சென்றவர்களின் பேருந்து, டீசல் டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து  முஹர்ராஸ் அருகே அதிகாலை நடைபெற்றது. இதனால் பேருந்தில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அதனால் விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் , விபத்தில் உயிரிழந்தவர்களில் 20 பேர் பெண்கள் என்றும், 11 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post கேரளாவில் பிஎல்ஓ தற்கொலை- அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Next Post காங்கோ சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி
Related Posts