மலாக்கா ஜலசந்தி பகுதியில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுவடைந்து இலங்கைக்குள் செல்லக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது புயலாக மேலும் வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி பகுதியில் வலுவடைந்துள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து இலங்கைக்குள் செல்லக் கூடும். இப்புயலுக்கு சென்யார் என ஏற்கெனவே பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தில் நாகை மற்றும் சென்னை இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்பிருக்கிறது.
வானிலை மாற்றங்களால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது; மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




