Hot News :

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை

© News Today Tamil

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவையொட்டிய கடல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படடுள்ளது. 

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவையொட்டிய சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ., ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏற்கெனவே, இலங்கையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக 150க்கு மேற்பட்ட இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post தவெகவில் இணைந்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
Next Post சபரிமலையில் பாயாசத்துடன் மதிய விருந்து
Related Posts