Hot News :

புயலால் ரயில்கள் நிறுத்தம்- ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

© News Today Tamil

‘டிட்வா’ புயலால் ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் அனைத்து ரயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தை தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருவதுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், ‘டிட்வா’ புயல் வடதமிழகம் நோக்கி நகருகிறது. 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அனைத்து ரயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 28) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சூறைக்காற்று வீசுவதால். ஐந்தாவது நாளாக இன்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.  

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post தமிழகம் வளர்கிறது மாநாட்டில் சத்யம் பயோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Next Post வருமான வரித்துறை அதிரடி- 25 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
Related Posts