செங்கோட்டையனுக்கு பிறகு நானும் தவெகவில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவில் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவர் செங்கோட்டையன். எம்.ஜிஆர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர். அதிமுகவின் மூத்த நிர்வாகியான இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் நேற்று இணைந்தார். இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் தவெகவிற்கு வருவார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்," செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. செங்கோட்டையனுக்கு பிறகு நானும் தவெகவில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அதிமுகவில் தான் இருப்பேன்.புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது" என்றார்.




