அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 25) ரோடு ஷோ நடத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியேற்றுகிறார். இதற்காக அயோத்தி சென்ற பிரதமர் மோடி, ராமர் கோயில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார். இதனைத் தொடர்ந்து ராமர் கோயிலில் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அயோத்தியில் ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா இன்று காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ராமர் கோயில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.




