தமிழகம் வளர்கிறது மாநாட்டில் சத்யம் பயோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தமிழக அரசு சார்பில் கோயம்புத்தூரில் தமிழகம் வளர்கிறது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதற்காக கலந்து கொண்டனர்.
மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சார்பில் அதன் செயல் அதிகாரி சத்யம் செந்தில்குமார் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முன்னிலையில் புதிய முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.




