சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது.
2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தொகுதிப்பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு அமைப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், ," தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் கருதி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.




