பஞ்சாபில் ஓடும் ரயிலின் ஏ.சி பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி பெட்டிகளில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது.
ரயிலில் இருந்து தீப்பிழம்பு வெளியேறுவதைக் கண்ட பயணிகள் அலறி துடித்தனர். இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரயில் பெட்டியில் பற்றிய தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வடக்கு மண்டலத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த தீ விபத்து குறித்து பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் திடீரென தீப்பிடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




