கோவையில் நடைபெறும் இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்.
கோவை கொடிசியா அரங்கத்தில் நவம்பர் 19-ம் தேதி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்
இதனையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையொட்டி மத்திய வேளாண் அமைச்சகத்தின் இயற்கை வேளாண்மை இணைச் செயலாளர் ஃபிராங்கிளின் கோபுங் று கோவை கொடிசியா அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.




