Hot News :

பூடானுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

© News Today Tamil

அரசு முறை பயணமாக பூடானுக்கு நாளை (நவம்பர் 11) இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். 

பூடான், இந்தியா உறவை வலுப்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்த அரசு முறை பயணத்தை நாளை மேற்கொள்ள உள்ளார் என்று  வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  இந்த பயணத்தின்போது இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெகா வாட் .நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இதனையடுத்து, பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயர்ந்த குடிமகன் விருதான  ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வழங்கப்பட்டது குறிப்படத்தக்கது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை- அண்ணாமலை கண்டனம்
Next Post புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தயாராகும் 300 கிலோ பிரம்மாண்ட கேக்
Related Posts