டெல்லியில் கார் குண்டு வெடிப்பு வழக்கில் 7வது நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ம் தேதி காரில் குண்டு வெடித்தது. உமர் நபி என்ற பயங்கவாதி நடத்திய இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் இத்தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ கைது செய்து வருகிறது.
இந்த வழக்கில், பரிதாபாத்தை சேர்ந்த சாஹிப் என்பவரை 7வது நபராக என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சாஹிப், டாக்டர் உமர் நபிக்கு தங்கும் இடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்கு ஒரு நாள் முன்பு வரை சாஹிப் வீட்டில் தான் உமர் நபி தங்கியிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.




