மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மகாராஷ்ட்டிரா மாநிலம், மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானம் (ஏஐ 191) இன்று புறப்பட்டுச் சென்றது. பயணிகளுடன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதை விமானிகள் குழு கண்டறிந்தது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பைக்கே திருப்பி விடப்பட்டது. அத்துடன் விமானத்தில் இருந்த பயணிகளிடம் தொழில்நுட்ப கோளாறு குறித்து எடுத்துரைத்த விமான நிர்வாக ஊழியர்கள், அவர்கள் தங்குவதற்கும், உணவு ஏற்பாடும் செய்து கொடுத்தனர்.
இதன் பின் மும்பையில் இருந்து வேறு விமானத்தில் பயணிகள் நெவார்க் நகரத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தது. இதேபோல் நியூவர்க் நகரத்தில் மறு மார்க்கமாக மும்பை புறப்பட இருந்த விமானம்( ஏஐ 144) ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானிகள் அச்சமடைந்தனர்.




