மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற சொத்து வரி விதிப்பு முறை வீட்டில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பலமுறை ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஹை கோர்ட் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நான்கு வாரங்களுக்கு தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.