தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்த படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், அரசு அதிகாரிகளுக்கான பிரிவில் கடந்த 02.10.25 முதல் 04.10.25 வரை சென்னையில் மகளிருக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. மொத்தம் 32 அணிகள் பங்கு பெற்றதில் மதுரை மாவட்ட அணியில் மதுரை மாநகர குழந்தைகள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. ஹேமா மாலா, மற்றும் O. C. P. M. பெண்கள் மேல் நிலை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் திருமதி. பெர்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை பெற்று வெள்ளி பதக்கத்தையும், 50,000 ரூபாய் க்கான காசோலையும் பெற்று வந்தனர்.