மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டம் உதவும் உறவுகளில் ஒருவரான 1999 பேட்ஜ் உதவி ஆய்வாளர் கணேசன் பணியில் இருக்கும் போது இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு உதவும் விதமாக 1999 பேட்ஜ் காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வங்கி கணக்கிற்கு அனுப்பிய தொகை மற்றும் மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் உதவி தொகை சேர்த்து மொத்தம் 13,57,000/- ரூபாய் இன்று (12/10/25) மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் உதவும் உறவுகள் ஆய்வாளர் சங்கர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் KVSசந்தனபாண்டியன், மணிக்குமார், முகமது உசேன், அருண்குமார், பிரேம்குமார், ராமசேவகன், முத்துப்பாண்டி ஆகியோர் உதவி ஆய்வாளர் கணேசன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.