எடப்பாடியார் ஆட்சி காலததில் கிராமங்களில் சாதனைமிகுந்த ஆட்சியாக இருந்தது
ஸ்டாலின் ஆட்சி கிராமங்கள் வேதனை மிகுந்த ஆட்சியாக உள்ளது.
சட்டமன்றஎதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது;
தமிழக முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. தான் பங்கேற்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய சாதனையாக முதலமைச்சர் கூறுகிறார். கிராமங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும், வலிமை அடைய வேண்டும் என்று கூறுகிறார் ஆனால் தற்போது கிராமம் நிலை என்ன?
அதேபோல வடகிழக்கு பருவமழை தொடர்பாக மின்சாரம், குடிநீர் அத்யாவசிய தேவைகளை அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சிகளில் சமூக அமைப்புகள், உள்ளூர் குழுக்கள் அமைத்து பேரிடர் காலங்களில் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.
எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த காலங்களில் தாலுகா அளவில், ஊராட்சி அளவில், மண்டல அளவில், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டது. சமூக பங்களிப்பாளர்கள், முதல் நிலை மீட்பாளர்கள், கால்நடை மீட்பாளர்கள் குழு அமைக்கப்பட்டன.
குறிப்பாக 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் அமைக்கப்பட்டனர். இதில் 14232 பெண்கள் இருந்தனர். அதேபோல 8871 கால்நடை மீட்பாளர்களும், பேரிடர் காலங்களில் வேருடன் சாய்ந்த மரங்களை
அகற்றவும் பேரிடர் இல்லாத காலங்களில் மரம் நடுவதற்கும் 9909 முதல் நிலை மீட்பாளர்கள் அமைக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது முதலமைச்சர் ஏதோ புதியதாக வழியை கண்டுபிடித்தது போலகோரிக்கை வைத்து தனக்குத்தானே பெருமை தேடிக் கொள்கிறார்.
கிராமங்களில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகிவிட்டது, கிராம மக்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை, எதிர்கட்சியாக இருக்கும் பொழுது கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று சாதனை என்று கூறினார், தற்பொழுது மக்களை சந்திப்பதே சாதனை என்று முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளார்கள். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு இவைகளால் தமிழகம் தலைகுனிந்து உள்ளது .
இன்றைக்கு கிராம பொருளாதாரத்தை லென்ஸ் வைத்து தேடும் நிலையில் உள்ளது இதனால் தமிழக மக்களுக்கு வேதனை தான் மிச்சமாக உள்ளது. எடப்பாடியாரின் தலைமையில் மக்களாட்சியை மலர செய்து, ஸ்டாலின் தலைமையான மன்னராட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழையில் உயிர் சேதம், பொருள் சேதம், பயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போதும் போல காரணம் தேடி கதை அளப்பதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.