பிஹார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிஹார் சட்டமன்ற தேர்தல் நவம்பவர் 6-ம் ததி 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் தேஜக, கூட்டணி சார்பில் தொகுதிகள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதுகுறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி பாஜக மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி.,யான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் துணை முதல்வர் சம்ரட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்வர் விஜய் சின்ஹா லகிசாராய் தொகுதியிலும் போட்டியிடுவர் என கட்சி அறிவித்துள்ளது. .
இப்பட்டியலில் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவின் பெயர் இடம் பெறவில்லை. எஞ்சிய தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர் என்று பாஜக தெரிவித்துள்ளது.