ஜம்மு காஷ்மீரில் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. இந்த வட்டத்தின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாகிஸ்தானில் இருந்து 2 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய முயற்சித்தனர். இதை கண்ட பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதற்கு பயங்கரவாதிகளும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.