*புதிய தலைமுறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்*
மோப்ப நாய் உதவியுடன் நள்ளிரவில் போலீஸார் சோதனை_
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு நேற்றிரவு சுமார் 11.50 மணியளவில் மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீஸார், அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
நள்ளிரவில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடந்த இச்சோதனையில், வெடிகுண்டு தொடர்பான எந்த பொருட்களும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. எனவே, மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.