அனில் அம்பானியின் தலைமை நிதி அதிகாரி அசோக் குமார் பால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் தலைமை நிதி அதிகாரியும், ரிலையன்ஸ் பவர் நிறுவத்தின் தலைமை அதிகாரியுமான இருந்த அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இவர் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான எஸ்இசிஐ சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.