மதுரையில் ஐந்து வயது சிறுமி கராத்தேயில் சர்வதேச சாதனை
கராத்தேவில் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸஸ்சில்
இடம் பெற்ற ஐந்து வயது சிறுமி P. J. சைனீகாஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.
மதுரை, சாய் நகர், காஞ்சராம்பேட்டை, கிரீன்ஸ் பிரவுட் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் கராத்தே சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை தபால் தந்தி நகர், மீனாட்சி நகரில் அமைந்துள்ள ஜே.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவி P. J. சைனீகாஸ்ரீ பழைய சாதனையை முறியடித்து ஐந்து வயது 1 மாதம் 26 நாட்களில் கராத்தே பிளாக் பெல்ட் பெற்று இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
P. J. சைனீகாஸ்ரீ பெற்றோர் R.பழனிச்சாமி, S.ஜெயஸ்ரீ கூறுகையில்
Founder of JAP Shotokan Karate Do India Academy மாஸ்டர்J.அருள்பிரகாஷ் அவர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து சாதனையை நிகழ்த்த காரணமாக இருந்தார் என்று மகிழ்ச்சியுடன் கூறினர். மேலும் P. J. சைனீகாஸ்ரீ க்கு இவர்களது பள்ளியின் தாளாளர் Dr.சக்தி ஜஸ்வர்யா, தலைமை ஆசிரியர் G. பிரியா MSc,M.Ed,PGDCA மற்றும்ஜே.ஏ.பி அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் J அருள்பிரகாஷ் அவர்களால் சான்றிதழ் மற்றும் ப்ளாக் பெல்ட் வழங்கப்பட்டது.