மாற்றுத்திறனாளிகள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்
மதுரை மாவட்டம், பாண்டி கோவில், எழில் மண்டபத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காண தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடத்தினர்.
இந்த விழாவுக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். அதை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் பல நூறு பேருக்கு வேஷ்டி, சேலை, இனிப்பு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.