ரெய்டின் போது கதவைத் திறக்காத அமைச்சர் மகள்..
2 மணி நேரமாக காத்திருந்த அமலாக்கத் துறையினர்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி. செந்தில் மற்றும் மகள் இந்திரா சோதனை செய்து வருகின்றனர்.
இதற்காக 15 வாகனங்களில் அதிகாரிகள் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காலை 7 மணிக்கு வந்தனர்.
இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து வள்ளலார் நகரில் உள்ள பெரியசாமி வீடு அவரது மகள் வீடு மற்றும் மகன் வீடுகளுக்கு சென்று சோதனை செய்தனர். ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டை காலை 7. 15 மணிக்கு அதிகாரிகள் கதவைத் தட்டினர் ஆனால் அவர்கள் யாரும் திறக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து கதவைத் தட்டிக் கொண்டே இருந்தனர். சுமார் 7. 45 மணிக்கு கதவைத் திறந்து பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கதவை மூடிக்கொண்டனர்.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். மீண்டும் மீண்டும் தட்டி இதை எடுத்து 8 45 மணிக்கு கதவை திறந்தனர். இதை அடுத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனைகளை ஆரம்பித்தனர்.
அமலாக்க துறையினரின் ரெய்டு அறிந்து திமுக கட்சிகளைச் சார்ந்தவர்கள் அமைச்சர் வீட்டு முன்பும் எம்எல்ஏ வீட்டு முன்பும் குவிந்தனர்.
எனினும் அனைத்து வீடுகளின் கதவுகள் மூடப்பட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது