மோசடி விவகாரத்தில் சிக்கிய பெடரல் ரிசர்வ் அமைப்பின் கவனர்னர் லிசா குக்கை அப்பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமைப்பின் கவர்னராக இருந்தவர் லிசா குக். இந்த பதவியை வகித்த முதல் ஆப்பிரிக்கா- அமெரிக்கா பெண்ணாவார். இவர் மீது பெடரல் ஹவுசிங் பைனான்ஸ் ஏஜென்சியின் இயக்குநரான பில் புல்டே, மோசடி குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
மேலும் ஜார்ஜியா மற்றும் மிக்சிகனில் அவர் அடமானம் வைத்துள்ள சொத்துகளின் ஆவணங்கள் மோசடியானவை என்றும், கடந்த 2021-ம் ஆண்டு அவர் விண்ணப்பங்களில் அளித்த தகவல்கள் தவறானவை என்றும் பில் புல்டே கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, லிசா குக் தாமாகவே முன் வந்து ஆக.20-ம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், அவரின் இந்த கோரிக்கையை லிசா குக் ஏற்க மறுத்தார். தன் மீதான மோசடி புகார்களுக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும், விரைவில் அவற்றை வழங்குவேன் என்று கூறியதுடன், தொடர்ந்து அப்பணியில் லச குக் நீடித்து வந்தார்.
இந்த நிலையில், பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிக் குக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிசா குக் 2022-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.