Hot News :
For Advertisement Contact: 9360777771

ஆபாச வீடியோக்களை வெளியிடுவோம்- பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

© News Today Tamil

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண் பெயர்களில் மறைந்து கொண்டு ஆபாச வீடியோக்களை வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறித்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

சமூக வலைதளங்களாக இன்ஸ்டாகிராம், முகநூல் மூலம் முகம் தெரியாத நட்பினர் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால், பணம் பறிக்கும் சில கும்பல்கள் பெண்கள் பெயர்களில் அக்கவுண்ட் துவங்கி அதன் மூலம் சபல ஆண்களை தங்கள் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் சம்பவம், உலகம் முழுவதும் தொடர்கிறது. அப்படி ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் ராக்ஸா காவல் நிலையத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டும் கும்பல் குறித்து கடந்த ஒரு மாதமாக புகார் வரத்தொடங்கின. அதுகுறித்து அவர்கள் விசாரணையை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தது.

இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பெண் பெயர்களில் இருந்து கொண்டு பழகி வாட்ஸ் அப் எண்ணை வாங்கி அதன் மூலம் சிலர் சாட்டிங் செய்துள்ளனர். அப்போது ஆபாச வீடியோக்களை பெண் பெயர்களில் இருப்பவர்கள் அனுப்ப, அதற்கு பதில் வீடியோக்களை அனுப்பும் ஆண்களை குறிவைத்து அந்த வீடியோக்களை வைரலாக்கி விடும் என மிரட்டி சிலர் பணம் பறிப்பது தெரிய வந்தது.

இது தொடர்பான ஆபாச அரட்டைகள் மற்றும் வீடியோக்களைக் கொண்டு போலீஸார் , சைபர் கிரைம் போலீஸார் துணையுடன் விசாரணையை நடத்திய போது இரண்டு வாலிபர்கள், பெண் பெயர்களில் பணம் கேட்டு மிரட்டுவது தெரிய வந்தது. 

அவர்களின் முகவரிகளைக் கண்டுபிடித்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரியைச் சேர்ந்த கஜ்ராஜ் லோதி(20), சந்தீப் லோதி (19) என்பது தெரிய வந்தது. இன்ஸ்டாகிராமில் பெண்கள் பெயரில் பலரிடம் தொடர்பு கொண்டு ஆபாச அரட்டை வீடியோக்களை அனுப்பி அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களையும், ஐந்து சிம் கார்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றை சோதனை செய்த போது ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. பெண்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் இவர்கள் இருவரும் இதுவரை எத்தனை பேரை ஏமாற்றி பணம் பறித்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக டிஜிபி சங்கர் ஜுவல் நியமிக்கப்படுகிறார்
Next Post ஆபாச வீடியோக்களை வெளியிடுவோம்- பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
Related Posts