பதிவுத்துறை பணித்திறன் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்
அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று காலை 10.15 மதுரையில் பதிவுத்துறை சார்பில் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் பணித்திறன் ஆய்வு மற்றும் மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணி சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், IAS, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.