தமிழக காவல்துறை டிஜிபியின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது.
புதிய டிஜிபி தேர்வு செய்வதில் அரசு குழப்பத்தில் இருந்த நிலையில் மூன்று பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜுவால் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட உள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அப்ப பதவியில் அவர் இரண்டு ஆண்டு காலம் நீடிப்பார்.
இந்நிலையில் தமிழக அரசின் புதிய டிஜிபியாக மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வரும் வரையில் பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.