வாடகை கேட்ட வியாபாரி மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் லோதௌர் நகரில் மார்க்கெட் உள்ளது. இங்கு பையலால் சோனி என்பவர் கடைகளை எடுத்து வாடகைக்கு விட்டு வந்தார். இவரிடம் சுபாஷ் சிங் என்பவர் வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வந்தார். அவர் வாடகை சரியாகக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆனந்த் சிங் என்பவருக்கும், சுபாஷ் சிங்கிற்கும் இன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் பையலால் சோனி சமாதானம் செய்துள்ளார். அவரை சுபாஷ் சிங் ஆபாசமாக திட்டியுள்ளார்.
அத்துடன் அங்கிருந்து சென்றவர் சிறிது நேரத்தில் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் என்பவருடன் கடைக்கு வந்துள்ளார். பையலால் சோனியைக் கொல்லும் நோக்கில் நாட்டு வெடிகுண்டை வீசினார். அதில் இருந்து பையலால் சோனி தப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ் தன்னிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டு மார்க்கெட், மருத்துவமனை சுவர்களில் சரமாரியாக வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வீடியோ வைரலாகவும் பிப்ரி காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று சுபாஷ் சிங், ஆஷிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வியாபாரியை கொலை செய்ய முயன்ற சம்பவம் கெளாசாம்பி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.