நடிகர் விஜயின் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
முதல்வர் ஸ்டாலினை பார்த்து அங்கிள் என்று சினிமா டயலாக் போல் பேசினார்.
விஜயின் பேச்சு திமுகவினரை எரிச்சல் அடைய வைத்தது. எனினும் யாரும் பதில் கூறாமல் அடக்கி வாசித்து வரும் நிலையில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விமல் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அந்த போஸ்டரில் வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.