Hot News :
For Advertisement Contact: 9360777771

குற்றங்கள் அதிகரிப்பு - தென்கொரியாவில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

© News Today Tamil

குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள்  செல்போன் பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

செல்போன் என்ற சாதனம் இல்லாத குடும்பமே இல்லை என்றாகி விட்டது. எந்த விஷயமானாலும் உடனுக்குடன் இந்த செல்போனை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானத்தின் வீச்சு உள்ளது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்குப் பதில் குற்றச்சம்பவங்களுக்கு இந்த செல்போன் பெருமளவு பயன்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்கொரியாவில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்ச சம்பவங்கள் அதிகரித்ததுள்ளது.இதனால் ஏராளமான மாணவ, மாணவியரின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

இந்நிலையில், பள்ளியில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த நிரந்த தடை விதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இங், பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென் கொரியாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post இன்றைய பஞ்சாங்கம்
Next Post இன்றைய பஞ்சாங்கம்
Related Posts