வண்டல் மண் எடுப்பதற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக தாசில்தார் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போஸ்டர் வெளியிட்டுள்ளது ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில், வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரிகள் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், தாசில்தார் சம்பத் மற்றும் குண்டவெளி வருவாய் ஆய்வாளர் சக்தி முருகன் ஆகியோர் மீது லஞ்சம் வாங்கியதாக ஜெயங்கொண்டம் நகரின் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போஸ்டரில் வலியுறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசின் நோக்கத்தை கேள்வி எழுப்பும் வகையில் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி குடைச்சல் கொடுத்தால் எப்படி என விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் ஆளுங்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.