ஸ்ரீகாசி மடத்தின் 22 ஆம் அதிபராக ஸ்ரீமத் சபாபதித் தம்பிரான் சுவாமிகள்
அருளாட்சி பீடம் ஏற்கும் நிகழ்ச்சி.
28-08-2025 அன்று திருப்பனந்தாள் காசிமடத்தின் ஸ்ரீசொக்கநாதர் பூஜா மடாலயத்தினைத் தரிசித்து ஸ்ரீகாசி மடத்தின் 22 ஆம் அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் அருளாட்சி பீடம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து ஸ்ரீகாசி மடத்தின் அட்டலெக்குமிக் கட்டில் மரபுப்படி நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு நடைபெறும்.
ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், தம்முடைய வாரிசாக நியமித்த, ஸ்ரீமத் சபாபதித் தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீகாசிமடத்தின் காறுபாறு ஆக ஓராண்டும், இளவரசாக 4 ஆண்டுகளும் திருமடத்தின் பூரா நிர்வாகமும் முழுப் பொறுப்புடன் திருத்தமாக நடத்தியும் 25-01-2021 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட உயிலின் மூலமாக 21 ஆம் அதிபர் அவர்களுடன் கூடவே ஒத்தாசையாக சின்னப் பட்டமாக இருந்தவர். "தருமையும் கமலையும் விரிதமிழ்க்கூடலும் திரு நகராக வீற்றிருந்து", அருளாட்சி புரியும் திருமுறை செப்பேடு கண்டருளிய 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் அவர்களைத் தரிசித்து அருளாசி பெற குருலிங்க, சங்கம வழிபாட்டிற்கு ஸ்ரீகாசிமடத்தின் 22 ஆம் அதிபர் ஆவணி மூலத்தன்று (02-09-2025) குருபீடம் தருமையாதீனத்திற்கு முதல் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.