சிபிஐ அதிகாரியை பின் தொடரும் மர்ம ஆட்டோவும் நான்கு ரவுடிகளும்
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு விசாரணை அதிகாரி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேரடி சாட்சிகளை மிரட்டுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் மீண்டும் டெல்லி சென்றுள்ளனர்.
தற்போது மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சப் இன்ஸ்பெக்டர் அதிகாரி ஒருவர் மட்டுமே வழக்கை கையாண்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்றில் நான்கு ரவுடிகள் சிபிஐ அலுவலகம் வந்துள்ளனர். சிறிது நேரம் அங்கேயே வலம் வந்து அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதுபோல் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்துள்ளனர்.
இது பற்றி சிபிஐ அதிகாரி கண்டு கொள்ளவில்லை. எனினும் தங்களது மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து சர்க்யூட் ஹவுஸ் சென்று தங்கி உள்ளார்.
ஆனால் அதே ஆட்டோவில் வந்த நான்கு பேரும் சர்க்யூட் ஹவுஸ் வந்து நோட்டம் பார்த்து சென்றுள்ளனர்.
ஆட்டோவில் வந்தவர்கள் அஜித் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.