தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்க மதுரை கிளையின் 12-வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு மதுரை தலைவர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாநில தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பரமசிவம் வரவேற்க செயலாளர் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜீவானந்தம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஓய்வூதியர்களின் குடும்பத்தினருக்கு பரிசுத்தொகையும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா மலரை தென் மண்டல தலைமை பொறியாளர் கணேஷ் வெளியிட்டார்.