ஓடும் ரயிலில் பயணிகளை கடிக்க பாய்ந்த இளைஞர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு
அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் ஒருவர் திடீரென அருகிலிருந்த சக பயணிகளை பார்த்து கடிக்க பாய்ந்தார்.
அவருக்கு ரேபிஸ் தொட்டு இருக்கலாம் என நினைத்த பயணிகள் அனைவரும் சேர்ந்து அவரை மடக்கி பிடித்தனர். ரயில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது அவரது முகம் மூடப்பட்டும், கால்கள் கட்டப்பட்டும் வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள் உதவியுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ரேபிஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சோதித்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் மதுபானம் அருந்தியது தெரிய வந்தது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனவும் தெரியவந்துள்ளது. இதைஅ டுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விசாரணையில் அவர் பெயர் சுரேந்தர் எனவும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.