பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பதவிகளை பறிக்கும் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது .
பாராளுமன்ற மக்களவையில் இன்று மூன்று சிறப்பு மசோதாக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார் .
ஒரு வழக்கில் தண்டனை பெற்று 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா.
அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதாக்களை மக்களவையில் தாக்கல்செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
3 மசோதாக்களையும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைப்பதற்கான முன்மொழிவையும் கொண்டு வந்தார்.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான தண்டனை பெறக் கூடிய வழக்குகளில் 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தகுதி நீக்கப்படுவர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.