விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், பிஹாரில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக அவர் நடத்திய பேரணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வருத்தம் அளிக்கிறது.
ராகுல் குறிப்பிட்டுள்ள 65 லட்சம் பேர் இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்கள். அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ராகுல் காந்தியுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் ஒரு பயத்தில் என்னை அப்படி பேசி வருகிறார். ஆனாலும் பரவாயில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார். அவர் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.