Hot News :
For Advertisement Contact: 9360777771

ஆர்.நல்லகண்ணு உடல்நிலை - அமைச்சர் அளித்த ஷாக் தகவல்

© News Today Tamil

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்ப்டடு வருவதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். 

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணுக்கு 100 வயதாகிறது. இந்த நிலையில்  ஆக.-22-ம் தேதி ஆர்.நல்லகண்ணு அவரது வீட்டில் கீழே தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர் நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் அவருக்கு தையல் போடப்பட்டது. பின்னர் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கெொள்ளப்பட்டன. 

அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் , திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் ஆர்.நல்லகண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவரை மருத்துவமனையில்  நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து உடல்நலன் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்.நல்லகண்ணு உடல் நிலை குறித்து மருத்துவர்களுடன் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். 

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டதில் இருந்து தீவிரசிகிச்சை மற்றும் சிறப்பு கண்காணிப்பில் உள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த சூழலில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக  தீவிர கண்காணிப்பில் இருக்கும் அவரின் உடல்நிலை குறித்து மக்கள் மற்றும் கட்சியினருக்கு தகவல் அளிப்பதற்கு தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரை காண்பதற்கு நேரில் யாரும் வர வேண்டாம் என்று தெரிவித்தார். 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post கூகுள் மேப்பால் விபரீதம்- ஆற்றுக்குள் வேன் பாய்ந்து குழந்தை உள்பட 4 பேர் பலி
Next Post பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வியாபாரியை கொல்ல முயற்சி!
Related Posts