முதலமைச்சர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமரப் போகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சென்னையில் தமாகா ஸ்தாபக தலைவர் ஜி.கே.முப்பனாரின் நினைவுநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழக மண்ணில், இந்திய மண்ணில் கொடுப்பதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் இந்த மேடையில் இப்போது தான் பேசிவிட்டு போய் இருக்கிறார். 2026-ம் ஆண்டு முதலமைச்சர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமரப் போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026-ம் ஆண்டு மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும் என்றார். இந்த நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமி அருகில் அண்ணாமலை அமர்ந்திருந்தார்.